ராமேஸ்வரம், திருவண்ணாமலை, மதுரை கோவில்களில் நாள் முழுவதும் அன்னதானம் வழங்கும் திட்டத்தை முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.
இதன் மூலம் தினமும் காலை 8 மணி முதல் இரவு 10 மணி வரை கோவில்களில் அன்னதானம் வழங்கப்படும். தினமும் 8000 பக்தர்கள் பயன்பெறுவார்கள் என்றும் கூறப்படுகிறது.
