புகழ்பெற்ற மதுரை அலங்காநல்லூர் மற்றும் பாலமேடு ஜல்லிக்கட்டு போட்டிக்கான ஏற்பாடுகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன.
வருகின்ற 16ஆம் தேதி பாலமேடு ஜல்லிக்கட்டும், அதனை தொடர்ந்து 17ம் தேதி புகழ் பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டும் நடைபெறுகின்றன.
இதையொட்டி அங்குள்ள வாடிவாசல்களை தயார்படுத்துதல், தோரணங்களை கட்டி அலங்கரித்தல், பார்வையாளர்கள் மற்றும் முக்கிய விருந்தினர்கள் அமர்வதற்கான மேடைகளை அமைத்தல் போன்ற பணிகளும் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன. விரைவில் இந்த பணிகள் நிறைவு பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.
பொங்கல் பண்டிகையின் முதல் ஜல்லிக்கட்டு மதுரை அவனியாபுரத்தில் நாளை நடைபெறுகிறது.
Leave a Comment