ஜெயலலிதாவின் 76-வது பிறந்தநாள் விழா: அதிமுகவினர் கொண்டாட்டம்!

 

மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் 76 ஆவது பிறந்த நாளையொட்டி சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகமான எம்ஜிஆர் மாளிகையில் அமைந்துள்ள அவரின் உருவ சிலைக்கு அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

தொடர்ந்து, அதிமுக தலைமை அலுவலகத்தில் கட்சி கொடியினை ஏற்றி வைத்தபின், தொண்டர்களுக்கு இனிப்புகளை வழங்கி, முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் ஏற்பாடு செய்த மருத்துவ முகாமை தொடங்கி வைத்தார்.

 

மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் 76 ஆவது பிறந்த நாளையொட்டி அதிமுக அவைத் தலைவர் தமிழ் மகன் உசேன் ஏற்பாட்டில் தயாரான 76 கிலோ கேக் வெட்டப்பட்டு தொண்டர்களுக்கு வழங்கப்பட்டது.

 
 
Exit mobile version