தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரும், ஈரோடு கிழக்கு சட்டமன்ற உறுப்பினர் ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் மூச்சுத் திணறல் மற்றும் நெஞ்சுவலி காரணமாக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
அகில இந்திய காங்கிரஸ் தலைவர் மல்லிகர்ஜூனா கார்கே, மற்றும் ராகுல்காந்தியிடம் வாழ்த்து பெறுவதற்காக இரண்டு நாட்களுக்கு முன்பு டெல்லி புறப்பட்டு சென்றார் ஈ.வி.கே.எஸ் இளங்கோவன். அங்கு மல்லிகர்ஜுனா கார்கே, கே.சி.வேணுகோபால் உள்ளிட்ட தலைவர்களை சந்தித்து வாழ்த்து பெற்றார்.
இதையடுத்து டெல்லியில் இருந்து விமானம் மூலம் சென்னைக்கு புறப்பட்டு வந்த நிலையில் திடீரென அவருக்கு மூச்சுத் திணறல் ஏற்பட்டது. உடனடியாக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையின் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
Leave a Comment