பொறியியல் படிப்புகளுக்கான சேர்க்கை கவுன்சிலிங் இன்று (திங்கட்கிழமை) தொடங்குகிறது.
தமிழகம் முழுவதும் 476 பொறியியல் கல்லூரிகள் இயங்கி வருகின்றன. இக்கல்லூரிகளில் பிஇ, பி.டெக் படிப்புக்கு 2 லட்சத்து 32 ஆயிரம் இடங்கள் உள்ளன. 2024-25ஆம் கல்வியாண்டுக்கான பொறியியல் படிப்புகளில் சேர விண்ணப்பித்த தகுதியான 1 லட்சத்து 99 ஆயிரத்து 868 மாணவர்களின் தரவரிசைப் பட்டியல் கடந்த 10ஆம் தேதி வெளியிடப்பட்டது.
இந்நிலையில், பொறியியல் படிப்புகளுக்கான சேர்க்கை கவுன்சிலிங் இன்று முதல் தொடங்குகிறது. முதற்கட்டமாக அரசுப் பள்ளிகளில் 6-ஆம் வகுப்பு முதல் பிளஸ்-2 வரை படிக்கும் மாணவர்களுக்கு 7.5 சதவீத உள் ஒதுக்கீட்டில் சிறப்புப் பிரிவு மாணவர்களுக்கான கவுன்சிலிங் இன்று தொடங்குகிறது.