கோடை காலத்திற்கு முன்னதாகவே வெயிலின் தாக்கம் அதிகமாகி வருவதால் பெரும்பாலானோர் கோடை விடுமுறையை எதிர்நோக்கி உள்ளனர். இம்முறை சுற்றுலா பயணிகளின் வரத்து அதிகரிக்கும் என்பதால் பல்வேறு நடவடிக்கைகளை மத்திய மாநில அரசுகள் மேற்கொண்டு வருகிறது.
அந்த வகையில் மலைகளின் அரசியான உதகைக்கு மேட்டுப்பாளையத்தில் இருந்து தினந்தோறும் காலை 07.10 மணிக்கு புறப்படும். இந்த வழித்தடங்கள் வனப்பகுதிகளில் அமைந்துள்ளதால் இயற்கை எழில் கொஞ்சும் வெளியில் வனவிலங்குகளை ரசித்தபடி செல்லலாம்.
இதனால் இந்த ரயில் பயணங்களை மேற்கொள்ள சுற்றுலா பயணிகள் போட்டி போட்டு கொண்டு வருவதால் பயண டிக்கெட் விரைவிலே தீர்ந்து விடுகிறது. இதனால் கடந்த ஆண்டு ஏராளமான சுற்றுலா பயணிகள் கூடுதல் ரயில்களை இயக்க கோரிக்கை வைத்து வந்தனர்.
இந்நிலையில் மேட்டுப்பாளையம் to ஊட்டிக்கு சென்று வரும் காலை 07.10 ரயிலுடன் கூடுதலாக ஒரு ரயில் இயக்கப்படும் என நிர்வாகம் தெரிவித்துள்ளது.
மேலும் கோடை விடுமுறையில் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை அதிகரிக்க இருப்பதால் ஏப்ரல் 14 முதல் ஜூன் 25 வரை சிறப்பு மலை ரயில் இயக்கப்படுவதாகவும் இரட்டிப்பு மகிழ்ச்சியை தந்துள்ளனர்.