சிங்கப்பூரில் நடைபெற்ற உலக செஸ் சாம்பியன்ஷிப் போட்டியில் இந்திய கிராண்ட்மாஸ்டர் குகேஷ் 14 சுற்றுகளுக்குப் பிறகு 32 வயதான உலக சாம்பியனான டிங் லிரனை (சீனா) 7½-6½ என்ற கணக்கில் தோற்கடித்து புதிய உலக சாம்பியனாக உருவெடுத்தார். இது தவிர, உலக செஸ் சாம்பியன்ஷிப் பட்டத்தை வென்ற இளம் வீரர் என்ற சாதனையையும் சென்னையைச் சேர்ந்த 18 வயதான குகேஷ் படைத்துள்ளார்.
உலக செஸ் சாம்பியன்ஷிப் பட்டம் வென்ற அவருக்கு பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். இந்தநிலையில், தற்போது நடிகர் ரஜினி தொலைபேசி மூலம் அழைத்து குகேஷுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். குகேஷ் நாளை சென்னை திரும்ப உள்ளது குறிப்பிடத்தக்கது.