நடிகரும், அரசியல் தலைவருமான விஜயகாந்த் காலமானார்!!

 

தேமுதிக தலைவர் விஜயகாந்த் கொரோனா தொற்றுக்கு சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்று (டிசம்பர் 28) காலமானார்.

நடிகர் விஜயகாந்த் தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக இருந்து பின்னர் அரசியலில் நுழைந்தார். தேமுதிக கட்சியை தொடங்கி எம்.பி.யாகவும், சட்டசபை எதிர்க்கட்சி தலைவராகவும் ஆனார். கடந்த சில ஆண்டுகளாக உடல்நிலை பாதிக்கப்பட்டு சிகிச்சைக்காக வெளிநாடு சென்று வந்தார்.

 

இந்நிலையில், அவருக்கு சளி, இருமல் காரணமாக மருத்துவமனையில் கடந்த மாதம் சேர்க்கப்பட்டார். அதன் பின், டிசம்பர் 11 ஆம் தேதி அவர் மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார். பின் கட்சியின் பொதுக்குழு செயற்குழு கூட்டத்தில் பங்கேற்றார்.

இந்நிலையில், இன்று அவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் மூச்சு விடுவதில் அவருக்கு சிரமம் ஏற்பட்டது. அதனால், அவருக்கு வெண்டிலேட்டர் சிகிச்சை வழங்கப்பட்ட நிலையில், சிகிச்சை பலனின்றி அவர் இன்று (டிசம்பர் 28) காலமானார். அவருடைய இறப்பு செய்தி தமிழக மக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

 
 
 
Exit mobile version