தமிழகத்தில் உள்ள பள்ளிகளில் தான் எப்போதும் 10 ஆம் வகுப்பு மற்றும் 12 ஆம் வகுப்பில் தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு வேலைவாய்ப்பு அலுவலக பதிவு செய்து தரப்படும். ஆனால், தற்போது பள்ளிகளில் வேலைவாய்ப்பு பதிவு செய்யும் முறை ரத்து செய்யப்பட்டுள்ளதாக அரசு அறிவித்துள்ளது.
தமிழகத்தில் கடந்த 2011 ஆம் ஆண்டில் இருந்தே 10 ஆம் வகுப்பு மற்றும் 12 ஆம் வகுப்பில் தேர்ச்சி பெற்ற மாணவ மாணவிகளுக்கு நேரடியாகவே அந்தந்த பள்ளியின் மூலமாகவே கல்வித் தகுதிகளை நேரடியாக வேலைவாய்ப்புத் துறை இணையதளத்தில் பதிவு செய்யும்படியான வசதி வழங்கப்பட்டது. இந்நிலையில், வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித் துறை கல்வித் தகுதிகளை நேரடியாக வேலைவாய்ப்புத் துறை இணையதளத்தில் பதிவு செய்வது குறித்தான அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.
அதாவது, முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் கல்வித் தகுதியினை பதிவு செய்வதற்கான கூட்டம் நடைபெற்றிருந்திருக்கிறது. அதாவது, 10 ஆம் வகுப்பு மற்றும் 12 ஆம் வகுப்பில் தேர்ச்சி பெற்ற மாணவ மாணவிகளுக்கு பள்ளிகளிலேயே வேலைவாய்ப்பு அலுவலகப் பதிவு செய்யும் நடைமுறை ரத்து செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால், ஆசிரியர்கள் மாணவர்கள் என அனைவருமே அதிர்ச்சியடைந்துள்ளனர்.
ஆனால், 10 ஆம் வகுப்பு மற்றும் 12 ஆம் வகுப்பு முடித்த மாணவ மாணவிகள் https://tnvelaivaaippu.gov.in/ என்கிற இணையதள முகவரி பக்கத்திற்கு தாங்களாகவே விவரங்களை பதிவு செய்துகொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், வேலைவாய்ப்புப் பதிவு, கூடுதல் பதிவு மற்றும் புதுப்பித்தல் உள்ளிட்ட சேவைகளை இ-சேவை மையங்களில் பதிவு செய்துகொள்ளலாம் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இது மட்டுமல்லாமல் வேலைவாய்ப்பு அலுவலகத்திலும் நேரில் வந்து பதிவு செய்து கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
உடனுக்குடன் அண்மைச் செய்திகளை தெரிந்து கொள்ள உடனே கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்து பின் தொடருங்க...
Google News - https://bit.ly/3BonVzx
Facebook - https://bit.ly/3iGDsUb
Twitter - https://bit.ly/3v42Kkh