தமிழக அரசின் ஆவின் நிறுவனம் பால் மற்றும் பால் பொருட்களுடன் சேர்த்து குடிநீர் விற்பனையை தொடங்க முடிவு செய்து உள்ளது.
தமிழகத்தில் அரசின் ஆவின் நிறுவனம் மக்களின் அத்தியாவசிய தேவையான பாலை உற்பத்தி செய்து விற்பனை செய்து கொண்டு வருகிறது. தினசரி சுமார் 30 லட்சம் பால் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. மேலும் அதனுடன் தயிர், நெய், வெண்ணை, பால்கோவா, ஐஸ்கிரீம் உள்ளிட்ட பால் பொருட்களும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
அதை தொடர்ந்து தற்போது ஆவின் குடிநீர் விநியோகம் செய்ய முடிவு செய்யப்பட்டு உள்ளது. தற்போது ஆவின் நிறுவனம் ஆவின் குடிநீரை விநியோகம் செய்ய ஒப்பந்தம் கோரி உள்ளது. ஒப்பந்தம் எடுப்பவர்கள் அரசின் சட்டத்திற்கு ஏற்றவாறு உரிய ஆவணங்கள் மற்றும் வழிகாட்டுதல்கள் படி ஆலையை பராமரிக்க வேண்டும் என நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளது.
அரசின் குடிநீர் திட்டம் வாயிலாக தினசரி 1 லட்சம் தண்ணீர் பாட்டில்களை விநியோகம் செய்ய முடிவு செய்து உள்ளது. முதல் கட்டமாக அரை மற்றும் 1 லிட்டர் குடிநீர் பாட்டில்களை அறிமுகம் செய்ய திட்டமிடபட்டுள்ளது.