ஆவின் பால், நெய்யை தொடர்ந்து தற்போது ஆவின் வெண்ணெய் விலையையும் உயர்த்தி தமிழக மக்களுக்கு திமுக அரசு அதிர்ச்சியை கொடுத்துள்ளது.
தமிழகத்தில் திமுக ஆட்சிக்கு வந்ததில் இருந்தே ஆவின் பொருட்களின் விலையை உயர்த்தி வருகிறது. கடந்த சில மாதங்களுக்கு முன்பு பால் விலையை உயர்த்திய நிலையில், நேற்று நெய் விலையை 50 ரூபாய் வரை உயர்த்தியது.
இந்த விலை உயர்வு மக்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், மேலும் ஒரு பேரிடியை திமுக அரசு இன்று கொடுத்துள்ளது. ஆவின் நெய்யை தொடர்ந்து, ஆவின் வெண்ணெய் விலையும் இன்று முதல் உயர்த்தப்படுவதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.
அதன்படி 500 கிராம் C ரக வெண்ணெய் 250 ரூபாயிலிருந்து 260 ரூபாயாக உயர்ந்துள்ளது. இதேபோல் 100 கிராம் C ரக வெண்ணெய் 52 ரூபாயிலிருந்து 55 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது. மேலும் 500 கிராம் T-ரக வெண்ணெய் 255 லிருந்து 265 ரூபாயாகயும், 100 கிராம் T ரக வெண்ணெய் 52 ரூபாயிலிருந்து 55 ரூபாயாகவும் விலை உயர்ந்துள்ளது.
இதேபோல் சால்டேட் சிப்லெட் பாக்கெட் வெண்ணெய் 200 கிராம், 130 லிருந்து 140 ரூபாயாக தமிழக அரசு உயர்த்தியுள்ளது. இந்த புதிய விலை உயர்வு இன்று முதல் அமலுக்கு வருவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
திமுக ஆட்சி தொடங்கியதில் இருந்தே ஆவின் பால் மற்றும் நெய் விலை உயர்த்தப்படட நிலையில் தற்போது ஆவின் வெண்ணெய்யின் விலையையும் உயர்த்தி உள்ளதற்கு பொதுமக்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.