தமிழக அரசின் கீழ் இயங்கி வரும் ஆவின் நிறுவனம் மக்களுக்கு குறைந்த விலையில் பால் வழங்கி வருகிறது. ஆவின் நிறுவனம் சார்பில் தினமும் 40 லட்சம் லிட்டர் பால் கொள்முதல் செய்யப்பட்டு மக்களுக்கு விற்பனை செய்யப்படுகிறது.
திமுக ஆட்சி பொறுப்பேற்றதும் ஆவின் பால் விலை குறைவதாக அறிவிப்பு வெளியிட்டாலும், அதன் பின் ஆவின் பால் விலை அதிகரித்துள்ளது. அதன் விலை அதிகரித்தாலும், தரம் நன்றாக இருப்பதால் மக்கள் நம்பிக்கையுடன் வாங்கி செல்கின்றனர்.
- Advertisement -
இந்நிலையில் ஆவின் நிறுவனம் சார்பில் மக்களுக்கு மாதாந்திர அட்டைகள் சலுகைகளுடன் நீண்ட காலமாக வழங்கப்பட்டு வருகிறது. தற்போது இந்த அட்டை மூலம் பால் வாங்கும் வாடிக்கையாளர்களுக்கு புதிய அறிவிப்பை நிர்வாகம் வெளியிட்டுள்ளது.
அதாவது, அட்டை மூலம் பால் வாங்கும் வாடிக்கையாளர்கள் கட்டாயம் ஆதார் எண்ணை இணைக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. நுகர்வோருக்கு பால் கிடைப்பதை உறுதி செய்யும் வகையிலேயே ஆதார் எண் சேகரிக்கப்படுவதாகவும், இதற்கான பணிகள் மாவட்டம் தோறும் மண்டல வாரியாக உள்ள அலுவலகங்களில் நடைபெற்று வருவதாக ஆவின் நிர்வாகம் சுற்றறிக்கை அனுப்பி இருக்கிறது.