தெற்கு அந்தமான் கடல் பகுதியில் வருகிற 26ஆம் தேதி அன்று புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்பு

 

வரும் 26-ம் தேதி சனிக்கிழமை, அந்தமான் கடல் பகுதியில் குறைந்த காற்றழுத்தத் தாழ்வு பகுதி உருவாக உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

நீலகிரி, கோவை, திண்டுக்கல் உள்ளிட்ட மேற்குத் தொடர்ச்சியை ஒட்டிய மாவட்டங்களில் நாளை, கனமுதல், மிக கனமழையும், டெல்டா மாவட்டங்களில் கன மழைக்கான வாய்ப்பும் உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

 

வரும் 26-ம் தேதி அந்தமான் கடல் பகுதியில் குறைந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி உருவாகும் என்றும், அது, மேற்கு, வடமேற்குத் திசையில் நகர்ந்து, தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய அந்தமான் கடல் பகுதியில் காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக வலுப்பெறும் என்றும் வானிலை மையம் தெரிவித்துள்ளது. இதனால் 26-ம் தேதிக்குள் ஆழ்கடல் சென்றுள்ள மீனவர்கள் கரைக்குத் திரும்ப அறிவுறுத்தப்பட்டுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக திருப்பூரில் 17 சென்டி மீட்டர் மழை பதிவாகியுள்ளது.

அடுத்து வரும் 3 நாட்களுக்கு தமிழகம் மற்றும் புதுச்சேரியில், மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும், சென்னை மற்றும் சென்னையின் புறநகர் பகுதிகளில் அடுத்த இரு தினங்களுக்கு மிதமான மழை பெய்யும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

 

அக்டோபர் 1-ம் தேதிமுதல் தற்போது வரை தமிழகத்தில் 24 சென்டி மீட்டர் மழை பதிவாகி உள்ளதாகவும், இது இயல்பை விட 15 சதவீதம் குறைவு என்றும், அதேபோல், சென்னையிலும் இயல்பை விட 30 சதவீதம் குறைவாக மழை பதிவாகியுள்ளதாகவும் வானிலை மையம் தெரிவித்துள்ளது.

 
 
Exit mobile version