-Advertisement-
அரபிக்கடலில் இன்று புதிய காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாக வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மைய தென் மண்டல தலைவர் பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார்.
சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், கேரளாவின் வடபகுதியில் வளிமண்டல மேலடுக்கில் சுழற்சி நிலவுவதாக தெரிவித்தார். அரபிக் கடலில் உருவாகும் காற்றழுத்த தாழ்வுப்பகுதியால் எந்த பாதிப்பும் இருக்காது என்று கூறியுள்ள அவர், அந்தமான் கடல் பகுதியில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி உருவாகி, அது இன்று அந்தமானை நோக்கி நகரும் என குறிப்பிட்டுள்ளார். இதன் காரணமாக வட கடலோர மாவட்டங்கள் மற்றும் உள்மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
-Advertisement-
-Advertisement-