திருச்சி கொள்ளிடம் ஆற்றில் வெள்ளப்பெருக்கு காரணமாக உயர் அழுத்த மின் கோபுரம் சாய்ந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கொள்ளிடம் ஆற்றில் நேப்பிர் பாலத்தில் மண் அரிப்பு ஏற்பட்டதன் காரணமாக அருகில் இருந்த உயர் மின்னழுத்த கோபுரத்தின் கான்கிரீட் தூண்கள் சாய்ந்து விழும் நிலையில் இருந்தது. அதனை வலுப்படுத்த இரவையும் பொருட்படுத்தாமல் மின்வாரிய ஊழியர்கள் கடும் முயற்சிகளை மேற்கொண்ட நிலையில், தண்ணீர் வேகம் தாங்காமல் நள்ளிரவு உயரழுத்த மின் கோபுரம் சாய்ந்தது.
இதனிடையே, கொள்ளிடம் ஆற்றில் இன்று அதிகாலை 5 மணி அளவில் 2வது உயரழுத்த மின்கோபுரமும் சாய்ந்து தண்ணீரில் விழுந்தது. நல்வாய்ப்பாக மின்சாரம் துண்டிக்கப்பட்டிருந்ததால் பெரும் உயிர் சேதம் தவிர்க்கப்பட்டது.