school exam

நாளை மறுநாள் தொடங்கும் +2 பொதுத் தேர்வு – 8.80 லட்சம் பேர் பங்கேற்பு

12 ஆம் வகுப்பு பொதுத் தேர்வு நாளை மறுநாள் தொடங்குகிறது. இந்த தேர்வினை 8 லட்சத்து 80 ஆயிரம் மாணவ, மாணவிகள் எழுத உள்ளனர். வரும் 13 ஆம் தேதி தொடங்க உள்ள தேர்விற்காக 3,169 தேர்வு மையங்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.

இதன்படி சுமார் 7,600 பள்ளிகளை சேர்ந்த மாணவ, மாணவிகள் இத்தேர்வை எழுதுகின்றனர். மேலும் வரும் 14 ஆம் தேதி தொடங்க உள்ள 11 ஆம் வகுப்பு பொது தேர்வினை 8 லட்சத்து 50 ஆயிரம் மாணவ, மாணவிகள் எழுதவுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த தேர்வுகள் அடுத்த மாதம் ஏப்ரல் 5 ஆம் தேதி வரை நடைபெற உள்ளன.