74வது குடியரசு தினத்தை முன்னிட்டு தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி தேசியக் கொடியை ஏற்றி வைத்தார்.
இதையடுத்து பேசிய அவர், ‘’நாட்டுக்காக இன்னுயிரை தியாகம் செய்த தீரமிக்க நம் வீரர்களை தேசம் நன்றியுடன் நினைவு கூர்கிறது. இந்நாளில் நமது ராணுவத்துக்கு வணக்கம் செலுத்துவோம். வ.உ.சி, பாரதி, வேலுநாச்சியார், மருது சகோதரர்கள் உள்ளிட்டோருக்கு மரியாதை செலுத்துவோம். ருக்மணி லட்சுமிபதி, குயிலி, அஞ்சலை அம்மாள் ஆகிய தியாகளுக்கு மரியாதை செலுத்துவோம். தாய் திருநாட்டின் ஒவ்வொரு அங்குலத்தையும் ரத்தம், வியர்வை, தியாகங்களால் வீரர்கள் பாதுகாத்தனர். காலத்தை வென்ற அரசியலமைப்பை வழங்கிய அம்பேத்கருக்கு நன்றியை உரித்தாக்குகிறோம். இந்திய பெருமைகளில் ஒன்றாகத் திகழ்கிறது தமிழ். இலங்கை நலனுக்காக தமிழக அரசும் உதவியுள்ளது. காலத்தை வென்ற அரசியலமைப்பை வழங்கிய அம்பேத்கருக்கு நன்றியை உரித்தாக்குகிறோம். தமிழ் மொழி வளர்ச்சிக்காக மத்திய அரசு உதவி வருகிறது’’ என அவர் தெரிவித்தார்.
