தமிழ்நாடுவேலைவாய்ப்பு

டிஎன்பிஎஸ்சி குரூப்-2, 2ஏ தேர்வுக்கு 7.90 லட்சம் பேர் விண்ணப்பம்!

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம், அரசுத் துறைகளில் காலியாக உள்ள பணியிடங்களை குரூப்-1, குரூப்-2, குரூப்-4 உள்ளிட்ட பல்வேறு போட்டித் தேர்வுகள் மூலம் நிரப்பி வருகிறது.

அந்த வகையில், 2024 ஆம் ஆண்டில், உதவி ஆய்வாளர், துணை வணிக வரி அலுவலர், வனவர் உள்ளிட்ட பல்வேறு குரூப்-2 பணியிடங்களில் 507 காலியிடங்களும், உதவியாளர், கணக்காளர், நேர்முக உதவியாளர் உள்ளிட்ட பல்வேறு குரூப்-2ஏ பணியிடங்களில் 1,820 காலியிடங்களும் என மொத்தம் 2,327 காலியிடங்கள் உள்ளன.

இதற்கான போட்டித் தேர்வு அறிவிப்பை டிஎன்பிஎஸ்சி கடந்த மாதம் (ஜூன்) 20ஆம் தேதி வெளியிட்டது. குரூப்-2 மற்றும் 2ஏ முதல் கட்ட தேர்வு செப்டம்பர் 14-ம் தேதி நடத்தப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், தேர்வர்கள் குரூப் 2 மற்றும் 2ஏ பணியிடங்களுக்கு www.tnpsc.gov.in என்ற இணையதளம் மூலம் விண்ணப்பித்திருந்தனர். குரூப் 2 மற்றும் 2ஏ என இரு பிரிவுகளில் 2,327 காலியிடங்கள் இருக்கும் நிலையில், இதுவரை மொத்தம் 7.90 லட்சம் பேர் விண்ணப்பித்துள்ளதாக தெரியவந்துள்ளது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!