கன்னியாகுமரி மாவட்டத்தில் தக்கலை மேட்டுக்கடையில் வாழ்ந்து, அற்புதங்கள் செய்து உயிரோடு சமாதியானதாக நம்பப்படும் மெய்ஞான மாமேதை செய்கு பீர்முகமது சாகிபு ஒலியுல்லா (ரலி) ஆண்டு பெருவிழா விமர்சையாக கொண்டாடப்படும். இந்த ஆண்டிற்கான பெருவிழா ஜனவரி மாதம் 23 ஆம் தேதி முதல் தொடங்கியது. மேலும் இந்த மார்க்க பேருரையாற்றும் நிகழ்ச்சி பிப்ரவரி மாதம் 6 ஆம் தேதி (நாளை ) இரவு 9.30 மணிக்கு நடைபெற இருக்கிறது.
அதனால் கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு அலுவலங்கள் மற்றும் கல்வி நிறுவனங்களுக்கு பிப்.6 ஆம் தேதி உள்ளூர் விடுமுறை விடப்பட்டுள்ளது. இது குறித்த அறிவிப்பை மாவட்ட ஆட்சியர் வெளியிட்டுள்ளார். மேலும் இந்த நிகழ்ச்சி ஏற்பாடுகளை தக்கலை அஞ்சுவன்னம் பீர்முகம்மதியா முஸ்லீம் அசோசியேஷன் தலைவர் வக்கீல் அப்துல் ஜப்பார் தலைமையில் துணைத்தலைவர் முகமது சலீம், பொருளாளர் முகமது ரபீக், முகமது ரஷீத், விழாக்குழு கன்வீனர் மாகீன் அபுபக்கர், செயலாளார் ஷாகுல் ஹமீது, பொருளாளர் காஜாமைதீன், இணைச்செயலாளர் அஷ்ரப் அலி மற்றும் குழுவினர் செய்துள்ளது குறிப்பிடத்தக்கது. மேலும் இந்த விடுமுறையை ஈடு செய்யும் வகையில் மார்ச் 11 வேலை நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது.