தமிழகத்தில் அரசு வேலை பெற வேண்டும் என்றால் முதலில் அரசு வேலை வாய்ப்புகள் பதிவு செய்ய வேண்டியது அவசியம். இந்த பதிவை மூன்று ஆண்டுகளுக்கு ஒரு முறை புதுப்பிப்பும் செய்ய வேண்டும். ஆரம்ப காலத்தில் வேலைவாய்ப்பு விழா பதிவின் மூலமாக சீனியாரிட்டி முறையில் பலருக்கு அரசு பணிகள் வழங்கப்பட்டது.
தற்போது அரசு பணிகளுக்கு கடும் போட்டி நிலவுவதால் கல்வித்தகுகுதிக்கு ஏற்றவாறு தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (TNPSC) வாயிலாக தேர்வுகள் நடத்தப்பட்டு தகுதியவர்களுக்கு அரசு பணிகள் வழங்கப்பட்டு வருகிறது. இருப்பினும் மாவட்ட அரசு வேலைவாய்ப்பு அலுவலகங்களில் வேலை வாய்ப்பு பதிவு அவசியம்.
கடந்த 2022 டிசம்பர் மாதம் 31 ஆம் தேதி நிலவரப்படி தமிழக முழுவதும் சுமார் 67.7 லட்சம் பேர் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து அரசு பணிக்காக காத்திருப்பதாக அரசு தகவல் வெளியிட்டுள்ளது. 67.7 லட்சம் பேரில் ஆண்கள் 36.14 லட்சம், பெண்கள் 31.60 லட்சம் பேர் ஆவர். அடுத்தாக 19 முதல் 30 வயதிற்கு உட்பட்டவர்கள் 27.95 லட்சம் பேர் என்று புள்ளி விவரங்கள் தெரிவிக்கிறது.