தமிழகத்தில் பொதுமக்களின் அச்சுறுத்தலுக்கு, ஆபத்தாக விளையும் 6 பூச்சிக்கொல்லி மருந்துகளுக்கு தடை விதிப்பதாக, தமிழ்நாடு அரசு அதிகாரப்பூர்வ அரசாணை வெளியிட்டுள்ளது.
தமிழகத்தில், சமீப தினங்களாக மருத்துவர்களின் பரிந்துரை சீட்டு இல்லாமல் மருந்துகளை விற்கக் கூடாது என மருந்து கட்டுப்பாட்டு கழகம் அறிவுறுத்தியுள்ளது. இதனைத் தொடர்ந்து, தூக்க மாத்திரை உள்ளிட்ட பவர் அதிகம் உள்ள மருந்துகளுக்கு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது.
இதன் ஒரு வழியாக, சமீப காலமாக விவசாயத்திற்கு பயன்படுத்தப்படும் இடுபொருளான பூச்சிக்கொல்லி மருந்துகளை உட்கொண்டு அதிகமானோர் தற்கொலை செய்து கொண்டதாக தகவல் வெளியானது.
இதை அடுத்து, மக்கள் உயிருக்கு அச்சுறுத்தலாக விளையும் அசிபேட், மோனோகுரோட்டோபாஸ், ப்ரோஃபெனோபாஸ், குளோர்பைரிஃபாஸ் உள்ளிட்ட 6 பூச்சிக்கொல்லி மருந்துகளுக்கு நிரந்தரமாக தடை விதிப்பதாக அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. பூச்சிக்கொல்லி கடைகளில் இந்த மருந்துகளை விற்கவும், விவசாயிகள் இதனை வாங்கி பயன்படுத்தவும் நிரந்தர தடை விதிக்கப்பட்டுள்ளது.