இன்று முதல் சென்னை கடற்கரை – தாம்பரம் – செங்கல்பட்டு இடையே 55 மின்சார ரயில்கள் இரு மார்க்கங்களிலும் ரத்து செய்யப்படுகிறது என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
ஜூலை 23, 2024 முதல் ஆகஸ்ட் 14, 2024 வரை தாம்பரம் ரயில்வே யார்டு மேம்பாட்டு பணிகள் நடைபெற உள்ளதால் இந்நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
மேலும், அதிகாலை முதல் காலை 9:20 மணி வரையும், மதியம் 1:00 மணியிலிருந்து இரவு 10:20 வரையும் கால அட்டவணைப்படி மின்சார ரயில்கள் வழக்கம்போல் இயங்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.