ஆவடி அருகே ரோஜா என்பவரின் வீட்டில் நேற்று (டிசம்பர் 19) திடீரென சிலிண்டர் வெடித்து விபத்து ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் காவல் துறைக்கு தகவல் தெரிவித்தனர்.
தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து படுகாயங்களுடன் ரோஜா, அவரது மகன், பேத்தி, பேரனை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர். சிலிண்டரில் கசிவு ஏற்பட்டு வெடித்ததாக விசாரணையில் தெரியவந்துள்ளது.