தமிழகத்தில் மின் கட்டணம் 4.83 சதவீதம் வரை உயர்த்தப்படுவதாக மின்சார ஒழுங்குமுறை ஆணையம் அறிவித்துள்ளது.
100 யூனிட் வரையிலான வீட்டு உபயோகத்திற்கு மின் கட்டணம் இல்லை என்ற நிலை தொடரும் என்று மின்சார ஒழுங்குமுறை ஆணையம் அறிவித்துள்ளது.
101 முதல் 400 யூனிட் வரை மின் கட்டணம் யூனிட்டுக்கு ரூ.4.80 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. மின் கட்டணம் 401லிருந்து 500 யூனிட் வரை ரூ.6.45 ஆகவும், 501ல் இருந்து 600 யூனிட் வரை ரூ.8.55 ஆகவும் உயர்த்தப்பட்டுள்ளது.
மின் கட்டணம் 601லிருந்து 800 யூனிட் வரை ரூ.9.65 ஆகவும், 801ல் இருந்து 1000 யூனிட் வரை ரூ.10.70 ஆகவும், 1000 யூனிட்டுக்கு மேல் ரூ.11.80 ஆகவும் உயர்த்தப்பட்டுள்ளது.
ஜூலை 1ம் தேதி முதல் பயன்படுத்தப்படும் மின்சாரத்திற்கு இந்த புதிய மின் கட்டணம் கணக்கிடப்படும் என்று கூறப்பட்டுள்ளது.