kovai govt hospital

அதிக சத்து மாத்திரைகள் சாப்பிட்ட மாணவிகள்.. 3 மாணவிகளுக்கு கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சை..!

ஊட்டச்சத்து மாத்திரைகளை அதிகமாக சாப்பிட்டு கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் 3 மாணவிகளும் நலமுடன் இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது.

கடந்த 6 ஆம் தேதி உதகை நகராட்சிக்குட்பட்ட காந்தல் பகுதியில் செயல்பட்டு வரும் உருது பள்ளியைச் சேர்ந்த 8ம் வகுப்பு மாணவிகள் நான்கு பேர் போட்டி போட்டுக்கொண்டு ஊட்டச்சத்து மாத்திரைகளை சாப்பிட்டனர். வாந்தி மயக்கம் ஏற்பட்டதையடுத்து 4 மாணவிகளும் கோவை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்.

அதில் ஒரு மாணவி கல்லீரல் செயல் இழந்து சென்னை கொண்டு சென்றபோது வழியில் சேலம் அரசு மருத்துவமனையில் உயிரிழந்தார். மூன்று மாணவிகளையும் கோவை அரசு மருத்துவமனை மருத்துவர்கள் தீவிர கண்காணிப்பில் வைத்து சிகிச்சை அளித்து வருகின்றனர்.