தமிழ்நாட்டில் இன்று ஈரோடு, சேலம் மற்றும் நாமக்கல் ஆகிய மாவட்டங்களில் வெயில் நூறு டிகிரி பாரன்ஹீட்டை தாண்டி கொளுத்தி வருகிறது.
கடந்த ஒரு வார காலமாக தமிழ்நாட்டின் மேற்கு மாவட்டங்களில் வெப்பம் படிப்படியாக அதிகரித்து வந்த நிலையில் இன்று அதிகபட்சமாக ஈரோடு மாவட்டத்தில் 100 புள்ளி 7 டிகிரி பாரன்ஹீட் வெப்பம் பதிவாகியுள்ளது.
- Advertisement -
சேலத்தில் 100 புள்ளி 5 டிகிரி பாரன்ஹீட்டும் நாமக்கல்லில் 100 புள்ளி 4 டிகிரி பாரன்ஹீட்டும் வெப்பம் பதிவாகி உள்ளது.