150 புதிய அதிநவீன விரைவு பேருந்துகளின் இயக்கத்தை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
சென்னை மாநகரப் போக்குவரத்துக் கழக மத்தியப் பணிமனையில் நடைபெற்ற விழாவில், அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகத்துக்கு ரூ.90.52 கோடி செலவில் 150 புதிய பிஎஸ்5 பேருந்துகளின் இயக்கத்தை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
இந்நிகழ்ச்சியில் அமைச்சர் சிவசங்கர், அமைச்சர் சேகர் பாபு, சென்னை மாநகராட்சி மேயர் பிரியா, எம்பிக்கள் தயாநிதிமாறன், எம்.சண்முகம், போக்குவரத்துத் துறை கூடுதல் தலைமைச் செயலர் கே. பனீந்திர ரெட்டி, அரசு விரைவுப் போக்குவரத்துக் கழக நிர்வாக இயக்குநர் மோகன் மற்றும் அரசு உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
அரசு விரைவு போக்குவரத்து கழகத்திற்கு நவீன தொழில்நுட்பத்துடன் கூடிய படுக்கை மற்றும் இருக்கை வசதிகளுடன் கூடிய 200 புதிய பேருந்துகள் ஒதுக்கப்பட்டுள்ளன. முதற்கட்டமாக இன்று முதல் 150 புதிய பேருந்துகள் இயக்கப்பட்டன. புதிய பேருந்தில் மாற்றுத்திறனாளிகள், முதியவர்கள், பெண்கள், குழந்தைகள் எளிதாக பயணிக்க சிறப்பு வசதிகள் செய்யப்பட்டுள்ளன.