
உலக புகழ் பெற்ற மதுரை, அவனியாபுரம் ஜல்லிக்கட்டு இன்று (ஜனவரி 14) கோலாகலமாக தொடங்கியது. இதில் 1,100 காளைகள் மற்றும் 900 மாடுபிடி வீரர்கள் களம் காண்கின்றனர்.
இப்போட்டியை காண ஏராளமானோர் வருகை தந்துள்ளனர். போட்டிகள் விறுவிறுப்பாக நடைபெற்றுக் கொண்டிருந்தபோது காளைகளைப் பிடிக்க முயன்ற வீரர்கள் 12 பேருக்கு காயம் ஏற்பட்டுள்ளது. அவர்கள் தற்போது சிகிச்சை பெற்று வருகின்றனர்.