கோவையில் இருந்து ஆம்னி பேருந்து ஒன்று பெங்களூரு நோக்கி சென்று கொண்டிருந்தது. இந்நிலையில் சேலம் அருகே பேருந்து திடீரென தீப்பிடித்து எரிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
தீப்பற்றியதைக் கண்ட மக்கள் உயிரைக் காப்பாற்றிக்கொள்ள பேருந்தில் இருந்து இறங்க முயன்றனர். இதில் 11 பேர் காயமடைந்தனர். பேருந்தில் தீ விபத்து எப்படி ஏற்பட்டது என்பது குறித்து முதல் கட்ட விசாரணை நடந்து வருகிறது.
