10ம் வகுப்பு பொதுத்தேர்வுக்கான அசல் மதிப்பெண் சான்றிதழ்கள் இன்று முதல் விநியோகிக்கப்படும் என அரசு தேர்வுகள் இயக்ககம் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் 10ம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு கடந்த மார்ச் 26 முதல் ஏப்ரல் 8ம் தேதி வரை நடைபெற்றது. இத்தேர்வில் 9 லட்சத்து 8 ஆயிரம் மாணவர்கள் தேர்வெழுதினர்.
மே 10ம் தேதி தேர்வு முடிவுகள் வெளியானபோது 91.55 சதவீத மாணவர்கள் தேர்ச்சி பெற்றனர். இந்நிலையில், 10ம் வகுப்பு பொதுத்தேர்வுக்கான அசல் மதிப்பெண் சான்றிதழ் இன்று முதல் விநியோகிக்கப்படும் என அரசு தேர்வுகள் இயக்ககம் அறிவித்துள்ளது.
அதன்படி, இன்று காலை 10 மணி முதல் மாணவர்களுக்கு அசல் மதிப்பெண் சான்றிதழ்கள் பள்ளி தலைமையாசிரியர்கள் மூலம் வழங்கப்படும் என்றும், தனித்தேர்வர்கள் தாங்கள் தேர்வு எழுதிய மையங்களில் சான்றிதழ்களை பெற்றுக் கொள்ளலாம் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.