தி.மு.க தேர்தல் வாக்குறுதிகளில் ஒன்றான குடும்ப தலைவிகளுக்கு மாதம்தோறும் ரூ.1000 வழங்கும் திட்டம் இன்று முதல் நடைமுறைக்கு வந்தது. இந்த திட்டத்தை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் காஞ்சிபுரத்தில் இன்று தொடங்கி வைத்தார்.
இதன்படி, தகுதி பெற்ற குடும்ப தலைவிகளுக்கு ரூ.1000 உரிமைத்தொகை சிலரின் வங்கிக் கணக்குகளுக்கு நேற்றே வரவு வைக்கப்பட்டது. நேற்று வரவு வைக்கப்படாத வங்கி கணக்குகளுக்கும் இன்று வரவு வைக்கப்பட்டது.
அதேபோல் மாத மாதம் எந்த தேதி ரூ.1000 வங்கி கணக்கில் வரவு வைக்கப்படும் என்று கேள்வி எழுந்தது. இதற்கு தமிழக அரசு மாதந்தோறும் 15 ஆம் தேதி மகளிர் உரிமைத் தொகை வரவு வைக்கப்படும் என்று தெரிவித்துள்ளது. ஒவ்வொரு மாதமும் 1 ஆம் தேதி சம்பளம் உள்ளிட்ட பரிவர்த்தனைகள் நடப்பதால் தொழில்நுட்ப பிரச்சனைகளைத் தடுப்பதற்காக 15 ஆம் தேதியில் வரவு வைக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
