மே 19ஆம் தேதி பத்தாம் வகுப்பு மற்றும் 11ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியிடப்படும் என அரசு தேர்வுகள் இயக்ககம் தெரிவித்துள்ளது.
அறிவிப்பின்படி, மே 19ஆம் தேதி காலை 10 மணிக்கு பத்தாம் வகுப்பு பொது தேர்வு முடிவுகள் வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் பின்னர் பிற்பகல் 2 மணிக்கு 11ஆம் வகுப்பு பொது தேர்வு முடிவுகள் வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
10 மற்றும் 11 ஆம் வகுப்பு மாணவர்கள் தங்கள் தேர்வு முடிவுகளை www.tnresults.nic.in / www.dge.tn.gov.in என்ற இணையதளத்தின் வாயிலாக தெரிந்து கொள்ளலாம்.
