வங்கக்கடலில் உருவாகும் ஃபெங்கல் புயல்!
தென்கிழக்கு வங்கக்கடலில் நிலை கொண்டிருந்த குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி இன்று (நவம்பர் 26) காலை ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றுள்ளது.
இது நாளை (நவம்பர் 27) புயலாக மாறும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த புயலுக்கு ஃபெங்கல் என்று பெயரிடப்பட்டுள்ளது. தற்போது தமிழக கடற்கரையை நோக்கி மணிக்கு 12 கி.மீ. வேகத்தில் நகர்ந்து வருகிறது.
தற்போது இது நாகை மாவட்டத்துக்கு தென்கிழக்கே 630 கி.மீ. தொலைவிலும், புதுச்சேரிக்கு தென்கிழக்கே 750 கி.மீ. தொலைவிலும், சென்னைக்கு தெற்கு – தென்கிழக்கே 830 கி.மீ. தொலைவிலும் நிலைகொண்டுள்ளது.
இது தொடர்ந்து வடமேற்கு திசையில் நகர்ந்து இலங்கை கரையை நெருங்கி பின்னர் அடுத்த 2 நாட்களில் புயலாக தமிழக கடற்கரையை நோக்கி நகரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.