தமிழக அரசின் 50வது தலைமைச் செயலாளராக முருகானந்தம் ஐஏஎஸ் பொறுப்பேற்றார்.
தமிழக அரசின் தலைமைச் செயலாளராக இருந்த சிவ்தாஸ் மீனா, ரியல் எஸ்டேட் ஒழுங்குமுறை ஆணையத் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.
இதையடுத்து தமிழக அரசின் 50வது தலைமைச் செயலாளராக முருகானந்தம் ஐஏஎஸ் நியமிக்கப்பட்டுள்ளார்.
பொறியியல் மற்றும் எம்பிஏ பட்டதாரியான முருகானந்தம், 1991ம் ஆண்டு ஐஏஎஸ் தேர்வில் தேர்ச்சி பெற்றார். 2001 முதல் 2004 வரை கோவை மாவட்ட கலெக்டராக பணியாற்றிய இவர், ஊரக வளர்ச்சித்துறை இணை செயலாளர், சுற்றுச்சூழல் துறை இயக்குனர் உள்ளிட்ட பல்வேறு பொறுப்புகளை வகித்துள்ளார்.
திமுக ஆட்சிக்கு வந்தவுடன் நிதித்துறை முதன்மை செயலாளராக நியமிக்கப்பட்டார். இதையடுத்து, முதல்வரின் தனிச் செயலாளராக நியமிக்கப்பட்ட முருகானந்தம், தற்போது தமிழக அரசின் தலைமைச் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.