வேலைவாய்ப்பு

மாதம் ரூ.50,000/- ஊதியத்தில் தமிழ்நாடு NHM வேலைவாய்ப்பு!!

தமிழ்நாடு NHM-தேசிய சுகாதார இயக்கத்தில் இருந்து அதன் காலியிடங்களை நிரப்பும் பொருட்டு புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதில் DEO, Assistant, State Consultant, IT Coordinator பணிகளுக்கு காலியிடங்கள் உருவாகியுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தகுதியும் விருப்பமும் வாய்ந்த விண்ணப்பதாரர்கள் இப்பணிக்கு விண்ணப்பித்து கொள்ள தேவையான தகுதிகள் மற்றும் தகவல்களை கீழே வழங்கியுள்ளோம். அதன் மூலம் தங்களின் பதிவுகளை மேற்கொள்ளலாம்.

நிறுவனம் – TN NHM
பணியின் பெயர் – DEO, Assistant, State Consultant, IT Coordinator
பணியிடங்கள் – 13
கடைசி தேதி – 25.08.2021
விண்ணப்பிக்கும் முறை – ஆன்லைன்

காலிப்பணியிடங்கள் :

தமிழ்நாடு NHM-தேசிய சுகாதார இயக்கத்தில் DEO, Assistant, State Consultant, IT Coordinator பணிகளுக்கு என 13 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டு உள்ளதாக குறிப்ப்பிடப்பட்டுள்ளது.

வயது வரம்பு :

DEO – 35 வயது
State Consultant – 45 வயது
Programme Assistant & IT Coordinator – 40 வயது

கல்வித்தகுதி :

  • Programme Assistant & Data Entry Operator – Any Degree தேர்ச்சியுடன் 1 வருட அனுபவம் கொண்டிருக்க வேண்டும்.
  • State Consultant (Public Health) – MBBS/ BDS/ Ayush/ Para-Medical தேர்ச்சியுடன் PG (Public Health/ Community Health/ Preventive and Social Medicine/ Epidemiology) பட்டமும் முடிக்க வேண்டும். அவற்றோடு 1-2 ஆண்டுகள் வரை அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
  • State Consultant (Legal) – BL தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
  • IT Coordinator – BE/ B.Tech (Biomedical) அல்லது MCA அல்லது M.Sc (MLT) தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

ஊதிய விவரம் :

தேர்வு செய்யப்படுபவர்களுக்கு குறைந்தபட்சம் ரூ.12,000/- முதல் அதிகபட்சம் ரூ.50,000/- வரை சம்பளம் வழங்கப்பட உள்ளது.

தேர்வு செயல்முறை :

பதிவாளர்கள் எழுத்துத்தேர்வு அல்லது நேர்காணல் மூலமாக தேர்வு செய்யப்படுவர். மேலும் தகவல்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பினை அணுகி அறிந்து கொள்ளலாம்.

விண்ணப்பிக்கும் முறை :

ஆர்வமும் தகுதியும் உள்ளவர்கள் வரும் 25.08.2021 அன்றுக்குள் கீழே கொடுக்கப்பட்டுள்ள ஆன்லைன் இணைய பதிவு முகவரி மூலம் பதிவு செய்து கொள்ளலாம்.

Official PDF Notification – https://nhm.tn.gov.in/en/node/6228

Apply Online – https://docs.google.com/forms/d/e/1FAIpQLSfIbbytAS5Vv0CK92r5tzDRk8Pb-rOQBndJvXpo3Pxolf-7KQ/viewform


உடனுக்குடன் அண்மைச் செய்திகளை தெரிந்து கொள்ள உடனே கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்து பின் தொடருங்க...
Google News - https://bit.ly/3BonVzx
Facebook - https://bit.ly/3iGDsUb
Twitter - https://bit.ly/3v42Kkh

Back to top button
error: