தமிழ்நாடு

ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் மாஸ் காட்டிய தமிழ்நாடு – இந்திய அளவில் முன்னிலை!!

கடந்த 6 ஆண்டுகளுக்கு முன்னாக துவங்கிய சீர்மிகு நகரங்கள் திட்டத்தை முறையாக செயல்படுத்திய நகரங்களின் வரிசையில் சென்னை இரண்டாம் இடத்தை பெற்றுள்ளதாக ஒரு தனியார் நிறுவனத்தின் ஆய்வறிக்கை தகவல் அளித்துள்ளது.

Smart City 4

பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசின் ஆட்சியின் கீழ் சுமார் 6 ஆண்டுகளுக்கு முன் ஸ்மார்ட் சிட்டி திட்டம் தொடங்கப்பட்டது. அதன் கீழ் பல்வேறு மாநிலங்களில் உள்ள சுமார் 100 முக்கிய நகரங்களை ஸ்மார்ட் சிட்டியாக மாற்ற அனுமதி கொடுக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் இத்திட்டத்தின் செயல்பாடுகள் இதுவரை 47% அளவு மட்டுமே முடிந்துள்ளதாக ஒரு தனியார் அமைப்பு நடத்திய ஆய்வு முடிவுகள் தெரிவித்துள்ளது.

அதாவது மத்திய அரசின் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தை தமிழ்நாடு, மத்தியப் பிரதேசம், குஜராத் உள்ளிட்ட சில மாநிலங்கள் மட்டுமே சிறப்பாக செயல்படுத்தி இருப்பதாக ஆய்வறிக்கை குறிப்பிட்டுள்ளது. அந்த வகையில் மத்தியப் பிரதேசத்தை சேர்ந்த போபால், இந்தூர், உஜ்ஜயின் உள்ளிட்ட நகரங்கள், குஜராத்தை சேர்ந்த ராஜ்கோட், சூரத் உள்ளிட்ட நகரங்கள் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தை சிறப்பாக செயல்படுத்தியுள்ளது. இதனுடன் தலைநகர் டெல்லி, நாகலாந்து உள்ளிட்ட மாநிலங்கள் ஸ்மார்ட் சிட்டி பணிகளை சுமார் 70% நிறைவேற்றியுள்ளதாகவும் ஆய்வுத் தகவல்கள் கூறுகிறது.

gurugram smart city

இதை தொடர்ந்து ராஜஸ்தான், குஜராத், கர்நாடகா, ஆந்திரா, மத்தியப் பிரதேசம், திரிபுரா, கோவா உள்ளிட்ட 7 மாநிலங்கள் இதுவரை 50 முதல் 60 சதவீத பணிகளை நிறைவு செய்துள்ளதாகவும் தரவுகள் கூறுகின்றன. மேலும் இந்தியாவில் தற்போது நிலவி வரும் கொரோனா சூழல் தான் இந்த ஸ்மார்ட் சிட்டி பணிகளை முடக்கி இருப்பதாகவும், சில மாநிலங்களில் நிதி பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதாகவும் சம்பந்தப்பட்ட நிர்வாகங்கள் தெரிவித்துள்ளது.

இதையும் படிங்க:  தமிழகத்தில் மாணவர்களுக்கு நீட் தேர்வு பயிற்சி – அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தகவல்!!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: