தமிழ்நாடுமாவட்டம்

இரவு ஊரடங்கு அமல்படுத்தப்படும்.. தமிழக அரசு எச்சரிக்கை..!

அறிவிக்கப்பட்ட கட்டுப்பாடுகள் பலன் தரவில்லை எனில் இரவு நேர ஊரடங்கு மற்றும் கூடுதல் கட்டுப்பாடுகள் விதிக்கப்படும் என தமிழக அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது.

தமிழகத்தில் கொரோனா பரவலின் எண்ணிக்கை நாள்தோறும் உயர்ந்து கொண்டே வருகிறது. தற்போது 4000-ஐ நெருங்கியுள்ளது.

தமிழகத்தில் கொரோனா பரவல் அதிகரித்ததை அடுத்து, தமிழக அரசு தலைமைச் செயலாளர், அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். இதையடுத்து, கொரோனா தொற்று தமிழகத்தில் அதிகரித்து வரும் நிலையில் அதனை கட்டுப்படுத்த புதிய கட்டுப்பாடுகளை தமிழக அரசு நேற்று(ஏப்ரல் 08) அறிவித்திருந்தது.

இந்நிலையில் தற்போதைய கட்டுப்பாடுகள் பலன் அளிக்கவில்லை என்றால் இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்படும் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது.

இதையும் படிங்க:  சென்னையில் மெட்ரோ ரெயில் இரவு 9 மணி வரை மட்டுமே இயங்கும்!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: