தமிழ்நாடு

தமிழக அரசு பயிற்சி மைய மாணவர்கள் நீட் தேர்வில் அசத்தல் – 1,615 பேர் தேர்ச்சி!!

நாடு முழுவதும் மருத்துவப் படிப்புகளுக்கான நடைபெற்ற நீட் நுழைவுத் தேர்வுகளுக்கான முடிவுகள் நேற்று வெளியிடப்பட்டன. அதில் தமிழக அரசுப்பள்ளி மாணவர்கள் அதிகளவு தேர்ச்சி பெற்று சாதனை படைத்துள்ள நிலையில், அரசு நடத்திய பயிற்சி மையங்களில் பயின்ற 1,615 பேர் இம்முறை தேர்ச்சி பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.

நீட் தேர்வு:

கொரோனா பரவலுக்கு மத்தியில் பல்வேறு எதிர்ப்புகளையும் மீறி கடந்த செப்டம்பர் 13ம் தேதி நீட் தேர்வுகள் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளுடன் நடைபெற்றது. கொரோனா பாதிப்பு மற்றும் சில காரணங்களுக்காக இதனை தவறவிட்ட மாணவர்களுக்கு அக்டோபர் 14ம் தேதி தேர்வு நடத்தப்பட்டது. இதற்கான ஒட்டுமொத்த முடிவுகளை தேசிய தேர்வு முகமை வெளியிட்டது. இதில் தமிழக அரசுப்பள்ளி மாணவர் இந்திய அளவில் 8வது இடம் பிடித்து சாதனை படைத்தார்.

neet 1 1

மேலும் தேர்வு முடிவுகளில் குளறுபடிகள் இருந்த காரணத்தால் அது இணையத்தில் இருந்து திடீரென நீக்கப்பட்டது. பின்னர் பிழைகள் சரிசெய்யப்பட்டு மீண்டும் இன்று பதிவேற்றம் செய்யப்பட்டது. இந்நிலையில் தமிழக அரசு பயிற்சி மையங்களில் பயின்று நீட் தேர்வெழுதிய மாணவர்கள் மற்றும் அவர்களில் வெற்றி பெற்றவர்கள் குறித்த விபரங்கள் தற்போது வெளியிடப்பட்டு உள்ளன.

இம்முறை தமிழக அரசு & அரசு உதவி பெறும் பள்ளிகளை சேர்ந்த 6,695 மாணவர்கள் நீட் தேர்வெழுதினர். அதில் அரசுப்பள்ளிகளை சேர்ந்த 738 பேரும், அரசு உதவி பெறும் பள்ளிகளை சேர்ந்த 877 பேரும் என ஒட்டுமொத்தமாக 1,615 பேர் வெற்றி பெற்று சாதனை படைத்துள்ளனர். அவர்களில் 15 மாணவர்கள் 400 மதிப்பெண்களுக்கு மேலும், 4 மாணவர்கள் 500க்கு மேல் மதிப்பெண்கள் பெற்றுள்ளனர்.

Back to top button
error: Content is protected !!