தமிழ்நாடு

700 ஆயுள் தண்டனை கைதிகள் விடுதலை – தமிழ்நாடு அரசு உத்தரவு

நீண்ட காலம் சிறை வாசம் அனுபவித்து வரும் 700 ஆயுள் தண்டனை கைதிகளை, பேரறிஞர் அண்ணாவின் 113-வது பிறந்தநாளை முன்னிட்டு, விடுதலை செய்வதற்கான அரசாணையை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.

நன்னடத்தை மற்றும் மனிதாபிமான அடிப்படையில் முன் விடுதலை செய்வதற்கான வழிகாட்டுதல்களையும் தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ளது. முன் விடுதலை குறித்து ஆய்வு செய்வதற்காக பல்வேறு குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.

இந்த குழுவினர் அரசின் வழிக்காட்டுதல்களுக்கு உட்பட்டு, கைதிகளை விடுதலை செய்வது தொடர்பாக, அறிக்கை அளிக்க வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


உடனுக்குடன் அண்மைச் செய்திகளை தெரிந்து கொள்ள உடனே கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்து பின் தொடருங்க...
Google News - https://bit.ly/3BonVzx
Facebook - https://bit.ly/3iGDsUb
Twitter - https://bit.ly/3v42Kkh

இதையும் படிங்க:  இன்றைய (03-12-2021) பெட்ரோல், டீசல் விலை நிலவரம்!
Back to top button
error: