தமிழ்நாடு

கலப்பட டீசல் விற்பவர்கள் மீது குண்டர் சட்டம் பாயும் – தமிழக அரசு அதிரடி உத்தரவு!!

கச்சா எண்ணெய் விலை அதிகரிப்பதால் பெட்ரோல், டீசல் விலை உயர்ந்து வருகிறது. அதன் காரணமாக ஆங்காங்கே டீசலில் கலப்படம் செய்யப்படுகிறது. எனவே கலப்பட டீசல் விற்பவர்கள் மீது குண்டர் சட்டம் பாயும் என தமிழக அரசு அதிரடியாக உத்தரவிட்டுள்ளது.

கச்சா எண்ணெயின் மதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருவதனால் பெட்ரோல் மற்றும் டீசல் விலை அதிகரித்து வருகிறது. இதனை தொடர்ந்து டீசலுக்கு பதிலாக பயோடீசல் பயன்படுத்துவதற்காக வாகன உரிமையாளர்கள் மத்திய அரசிடம் கோரிக்கை வைத்து வந்தனர். அதற்கான மாற்று ஏற்பாடுகளை மத்திய அரசு மேற்கொள்ளாத நிலையில் மண்ணெண்ணை, நேப்தா, பாலிதின் தின்னர், இதோடு எஞ்ஜின் ஆயில் போன்றவற்றை கலந்து பயோ டீசல் என்கிற பெயரில் சிலர் விற்பனை செய்ய தொடங்கினர்.

இதற்காக இதுவரை யாருக்கும் அனுமதி வழங்கப்படாத நிலையில் ஒரு சிலர் சாலையோரம் வாகனத்தை நிறுத்தி நேரடியாக விற்பனை செய்வதாக புகார்கள் எழுந்தது. மேலும் ஒரு சில பகுதிகளில் கலப்பட டீசல் விற்பனை செய்வதாகவும் வந்த புகாரின் பேரில் இன்ஸ்பெக்டர்கள் பல குழுக்களாக பிரிந்து மேற்படி பகுதிகளில் கலப்பட டீசல் வாகன சோதனை தீவிரமாக மேற்கொள்ளப்பட்டது. கடந்த 2 மாதங்களில் மட்டும் இது சம்பந்தமாக மொத்தம் 7 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, அதில் 26 ஆயிரத்து 400 லிட்டர் கலப்பட டீசல் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

கடந்த 5-ந் தேதி வாகன தணிக்கையில் 1,350 லிட்டர் கலப்பட டீசல் ஏற்றி வந்த லாரி பறிமுதல் செய்யப்பட்டு வெங்கடேசன் என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார். அதனை தொடர்ந்து கலப்பட டீசல் விற்பனை செய்பவர்கள் மீது குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்க கடுமையான நடவடிக்கை எடுக்க தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகிறது. மேலும் கலப்பட டீசல் விற்பனை செய்பவர்கள் மீது குண்டர் சட்டம் பாயும் என தமிழக அரசு எச்சரித்து உள்ளது.

இதையும் படிங்க:  அமளியில் ஈடுபட்ட அதிமுகவினர்!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: