வேலைவாய்ப்பு

ரூ.62000/- ஊதியத்தில் தமிழ்நாடு அரசு மீன்வளத் துறை வேலைவாய்ப்பு 2021 – தேர்வு கிடையாது!!

தமிழ்நாடு அரசு மீன்வளம்‌ மற்றும்‌ மீனவர்‌ நலத்துறையின்‌ கட்டுப்பாட்டில்‌ உள்ள சென்னை மீன்பிடித்துறைமுக திட்ட கோட்ட செயற்பொறியாளர்‌ அலுவலகத்தில்‌ காலியாக உள்ள இரண்டு ஊர்தி ஒட்டுநர்‌ பணியிடத்தினை நிரப்பிட தகுதிவாய்ந்த நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள்‌ பதிவு அஞ்சல்‌ மூலமாக மட்டும்‌ வரவேற்கப்படுகின்றன. விண்ணப்பங்கள்‌ அனுப்பவேண்டிய கடைசி தேதி 02.09.2021.

நிறுவனம் – தமிழ்நாடு அரசு மீன்வளத் துறை
பணியின் பெயர் – ஊர்தி ஒட்டுநர்‌
பணியிடங்கள் – 02
விண்ணப்பிக்க கடைசி தேதி – 02.09.2021
விண்ணப்பிக்கும் முறை – Offline

காலிப்பணியிடங்கள்:

ஊர்தி ஒட்டுநர்‌ பதவிக்கு இரண்டு பணியிடங்கள் காலியாக உள்ளன.

வயது வரம்பு குறித்த தகுதிகள்‌:

01.07.2021 தேதியின் படி, விண்ணப்பதாரரின்‌ குறைந்தபட்ச வயது 18 முதல் அதிகபட்ச வயது 35 க்குள் இருக்க வேண்டும். மேலும் வயது தளர்வு பற்றிய விவரங்களை அறிய அதிகாரப்பூர்வ அறிவிப்பை அணுகவும்.

கல்வித்‌ தகுதி:

  1. பத்தாம்‌ வகுப்பு தேர்ச்சி (எஸ்‌.எஸ்‌.எல்‌.சி)
  2. இலகுரக ஊர்தி ஒட்டுநர்‌ உரிமம்‌ பெற்று வாகனம்‌ இயக்குவதில்‌ மூன்று ஆண்டுகள்‌ அனுபவம்‌ பெற்றிருத்தல்‌ வேண்டும்‌.
  3. தமிழில்‌ எழுத மற்றும்‌ படிக்க தெரிந்திருக்கவேண்டும்‌.
  4. தானியங்கி மோட்டார்‌ வாகன பழுது பணிமனையில்‌ ஒரு வருடத்திற்கு குறையாமல்‌ அனுபவம்‌ பெற்றிருக்கவேண்டும்‌.

மாத சம்பளம்:

தேர்வு செய்யப்படும் தேர்வர்க்கு ரூ.19500 முதல் ரூ.62000/- வரை ஊதியம் வழங்கப்பட உள்ளது.

குறிப்புகள்:

  1. ஓட்டுநர்‌ உரிமம்‌ நாளது தேதிவரை புதுப்பிக்கப்பட்டிருக்கவேண்டும்‌.
  2. தற்போது நடைமுறையில்‌ உள்ள அரசு விதிமுறைகளின்படி பணி நியமனம்‌ செய்யப்படும்‌ மற்றும்‌ காலியிடங்கள்‌ பகிர்மானம்‌ அடிப்படையில்‌ செய்யப்படும்‌.
  3. முழுமையாக பூர்த்தி செய்யப்படாத மற்றும்‌ தவறான விவரங்கள்‌ அளிக்கப்பட்ட விண்ணப்பங்கள்‌ நிராகரிக்கப்படும்‌.
  4. விண்ணப்‌ பங்கள்‌ பதிவு அஞ்சல்‌ மூலமாக மட்டுமே அனுப்பப்படவேண்டும்‌. நேரிலோ அல்லது இணையதளம்‌ மூலமாக பெறப்படும்‌ விண்ணப்பங்கள்‌ ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது.
  5. ஒரு விண்ணப்பதாரர்‌ ஒரு விண்ணப்பம்‌ மட்டுமே அனுப்பலாம்‌.
  6. விண்ணப்பங்கள்‌ எவ்வித முன்னறிவிப்புமின்றி ரத்து செய்யப்படும்‌.

விண்ணப்பிக்கும் முறை:

தகுதியும் திறமையும் உள்ள விண்ணப்பத்தார்கள் அறிவிப்பில் உள்ள விண்ணப்படிவத்தை பூர்த்தி செய்து 02.09.2021 க்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

Official PDF Notification – https://www.fisheries.tn.gov.in/includes/assets/cms_uploads/pdf/latestnews/Advertisement_-_Filling_up_of_the_post_of_Driver.pdf

இதையும் படிங்க:  டிகிரி முடித்தவர்களா? ரூ.67,700/- ஊதியத்தில் – மத்திய அரசில் வேலைவாய்ப்பு!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: