தமிழ்நாடுமாவட்டம்

தமிழகத்தில் ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு அமல்.. தமிழக அரசு அறிவிப்பு..!

தமிழகத்தில் அனைத்துப் பகுதிகளிலும் ஞாயிற்றுக்‍கிழமைகளில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. முழு ஊரடங்கின்போது இறைச்சி, மீன், காய்கறி உள்ளிட்ட அனைத்துக்‍‍கடைகள் இயங்காது என தெரிவிக்‍கப்பட்டுள்ளது.

தமிழகத்தின் அனைத்துப் பகுதிகளிலும் ஞாயிற்றுக்‍கிழமைகளில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்படும் என்றும், முழு ஊரடங்கின்போது இறைச்சி, மீன், காய்கறி உள்ளிட்ட அனைத்துக்‍‍கடைகள் இயங்காது என்றும் தெரிவிக்‍கப்பட்டுள்ளது.

திரையரங்குகள், வணிக வளாகங்களுக்‍கு அனுமதியில்லை என்றும், மீறுவோர் மீது நடவடிக்‍கை எடுக்‍கப்படும் என்றும் தெரிவிக்‍கப்பட்டுள்ளது.

உணவகங்களில் காலை 6 முதல் 10 வரையிலும், நண்பகல் 12 முதல் மதியம் 3 வரையிலும், மாலை 6 முதல் இரவு 9 வரையிலும் பார்சலுக்‍கு மட்டுமே அனுமதிக்‍கப்படும் என்றும், ஸ்விக்‍கி, ஸொமோட்டோ உள்ளிட்ட சேவைகள் மூலம் உணவு விநியோகத்திற்கு அனுமதி வழங்கப்படுவதாகவும் தமிழக அரசு தெரிவித்துள்ளது.

ஊடகம் மற்றும் பத்திரிகைத் துறையினர் ஞாயிற்றுக்‍கிழமைகளிலும் தொடர்ந்து பணியாற்றலாம் என்றும் தெரிவிக்‍கப்பட்டுள்ளது.

முழு ஊரடங்கு உட்பட அனைத்து நாட்களிலும் திருமணம் சார்ந்த நிகழ்வுகளில் 100 நபர்களுக்‍கு மிகாமல் பங்கேற்க அனுமதி அளிக்‍கப்படுவதாகவும், முழு ஊரடங்கு உட்பட அனைத்து நாட்களிலும் இறப்பு சார்ந்த நிகழ்வுகளுக்‍கு 50 பேருக்‍கு மிகாமல் பங்கேற்க அனுமதி வழங்கப்படுவதாகவும் தமிழக அரசு தெரிவித்துள்ளது.

இதையும் படிங்க:  தமிழகத்தில் 10 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: