வேலைவாய்ப்பு

தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக வேலைவாய்ப்பு – 450 காலியிடங்கள்!!

தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தில் காலியாக உள்ள பட்டியல்‌ எழுத்தர்‌, உதவுபவர்‌ மற்றும்‌ காவலர்‌ பணியிடங்களை நிரப்ப புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது. இதற்கு தகுதியும் திறமையும் உள்ள ஆண் விண்ணப்பத்தார்களிடம் இருந்து விண்ணப்பங்கள்‌ வரவேற்கப்படுகின்றன. எனவே ஆர்வமுள்ளவர்கள் 03-09-2021 க்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

நிறுவனம் – தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம்
பணியின் பெயர் – பட்டியல்‌ எழுத்தர்‌, உதவுபவர்‌ மற்றும்‌ காவலர்‌
பணியிடங்கள் – 450
விண்ணப்பிக்க கடைசி தேதி – 03-09-2021
விண்ணப்பிக்கும் முறை – Offline

காலிப்பணியிடங்கள்:

பட்டியல்‌ எழுத்தர்‌ – 150
உதவுபவர்‌ – 150
காவலர்‌ – 150
தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தில் மொத்தம் 450 பணியிடங்கள் காலியாக உள்ளன.

வயது வரம்பு:

01.07.2021 தேதியின் படி, விண்ணப்பத்தார்கள் வயதானது அதிகபட்சம் 30 முதல் 35 க்குள் இருக்க வேண்டும். மேலும் வயது தளர்வு பற்றிய விவரங்களை அறிய அதிகாரப்பூர்வ அறிவிப்பை அணுகவும்.

கல்வி தகுதி:

பட்டியல்‌ எழுத்தர்‌ – பி.எஸ்‌.சி. (அறிவியல்‌)
உதவுபவர்‌ – +2 தேர்ச்சி
காவலர்‌ – 8 ஆம் வகுப்பு தேர்ச்சி

ஊதியம்:

பட்டியல்‌ எழுத்தர்‌ – ரூ.2410 + ரூ.4049 (அகவிலைப்படி)
உதவுபவர்‌ – ரூ.2359 + ரூ.4049 (அகவிலைப்படி)
காவலர்‌ – ரூ.2359 + ரூ.4049 (அகவிலைப்படி)

விண்ணப்பிக்கும் முறை:

தஞ்சை மாவட்டத்தை இருப்பிடமாக கொண்ட மேற்காணும்‌ தகுதியுடைய ஆண்களிடமிருந்து மட்டும்‌ விண்ணப்பதாரர்கள்‌ உரிய சான்றுகளுடன்‌ மண்டல மேலாளர்‌, மண்டல அலுவலகம்‌, தமிழ்நாடு நுகர்பொருள்‌ வாணிபக்‌ கழகம்‌ எண்‌.1 சச்சிதானந்த மூப்பனார்‌ ரோடு, தஞ்சாவூர்‌-613 001 என்ற முகவரிக்கு விண்ணப்பங்கள்‌ வரவேற்கப்படுகிறது. விண்ணப்பங்கள்‌ 03.09.2021 அன்று மாலை 5.00 மணி வரை ஏற்றுக்கொள்ளப்படும்‌.

 


உடனுக்குடன் அண்மைச் செய்திகளை தெரிந்து கொள்ள உடனே கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்து பின் தொடருங்க...
Google News - https://bit.ly/3BonVzx
Facebook - https://bit.ly/3iGDsUb
Twitter - https://bit.ly/3v42Kkh

இதையும் படிங்க:  மாத ஊதியம் ரூ.1,77,500/- MHA வேலைவாய்ப்பு – தேர்வு, நேர்காணல் கிடையாது!!!
Back to top button
error: