தமிழகத்தில் முதல் அலை கொரோனா வைரஸ் பரவல் கடந்த 2020 மார்ச் மாதம் பரவத் தொடங்கியது. இதனால் ஏராளமான மக்கள் பாதிக்கப்பட்டு உயிரிழந்தனர். இதனை கட்டுப்படும் நடவடிக்கையாக அரசு ஊரடங்கு மற்றும் கட்டுப்பாடுகளை விதித்தது. இந்த வைரஸ் தாக்குதலில் இருந்து மக்கள் மீண்டு வர முடியாமல் இருந்த நிலையில் அடுத்த தாக்குதலாக கொரோனா வைரஸ் தொற்றில் இருந்து உருமாற்றம் அடைந்த டெல்டா பிளஸ் வைரஸ் வேகமெடுக்கத் தொடங்கியது.அதன் தொடர்ச்சியாக ஓமிக்ரான் வைரஸ் பரவியது.
இப்படி இடைவிடாது இரண்டு வருடங்களாக கொரோனாவின் பிடியில் நாம் சிக்கி கொண்டுள்ளோம். இதனை தடுக்க அரசும் பல்வேறு தடுப்பு பணிகளை மேற்கொண்டு வருகிறது. இதன் விளைவாக கடந்த 2 மாதங்களாக தான் மக்கள் மீண்டும் இயல்பு வாழ்க்கையை நோக்கி திருப்பி வருகின்றனர். இந்த நேரத்தில் அடுத்த தாக்குதலாக ஒமைக்ரான் தொற்றின் திரிபான எக்ஸ்.இ வகை கொரோனா தொற்று பரவத் தொடங்கியுள்ளது. இந்த வைரஸ் இந்தியாவில் பாதிப்புகளை ஏற்படுத்தி வருகிறது. ஏற்கனவே ஜூன் மாதத்தில் கொரோனா 4ம் அலை வைரஸ் பரவும் என்று உலக சுகாதார அமைப்பு எச்சரித்தது குறிப்பிடத்தக்கது.
இந்த வைரஸ் அச்சத்தால் அனைத்து மாநிலங்களும் மீண்டும் கட்டுப்பாடுகளையே விதிக்க தொடங்கியுள்ளது. அதே போல தமிழகத்திலும் நோய்த் தடுப்பு பணிகள் குறித்து ஆராய சுகாதாரத்துறை அமைச்சர், செயலாளர், உள்ளிட்ட மூத்த அதிகாரிகளுடன் முதல்வர் நாளை காலை ஆலோசனை நடத்த உள்ளார். இதன் பிறகு மீண்டும் ஊரடங்கு விதிக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.
உடனுக்குடன் அண்மைச் செய்திகளை தெரிந்து கொள்ள உடனே கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்து பின் தொடருங்க...
Google News - https://bit.ly/3BonVzx
Facebook - https://bit.ly/3iGDsUb
Twitter - https://bit.ly/3v42Kkh