தமிழ்நாடு

தமிழக சட்டமன்ற தேர்தல்.. தேர்தல் ஆணையம் இன்று தமிழக அதிகாரிகளுடன் ஆலோசனை..

தமிழக சட்டமன்ற தேர்தல் தொடர்பாக அரசு தலைமைச்செயலர், உள்துறைச்செயலர், காவல்துறை தலைவர் உள்ளிட்டோரை தேர்தல் ஆணைய அதிகாரிகள் இன்று சந்தித்துப் பேசுவுள்ளனர்.

தமிழக சட்டப்மன்ற தேர்தல் தேதி தொடர்பாக ஆலோசனை நடத்துவதற்காக இந்தியத் தேர்தல் ஆணைய அதிகாரிகள் சென்னை வந்துள்ளனர். தலைமைத் தேர்தல் ஆணையர் திரு. சுனில் அரோரா, தேர்தல்ஆணையர்கள் திரு. சுஷில் சந்திரா, திரு. ராஜீவ் குமார் உள்ளிட்டோர் தமிழகம் வந்துள்ளனர். நேற்று சென்னை கிண்டியிலுள்ள நட்சத்திர ஹோட்டலில், அங்கீகரிக்‍கப்பட்ட அரசியல் கட்சிப் பிரதிநிதிகளுடன், அவர்கள் ஆலோசனை நடத்தினர்.

இந்நிலையில், தலைமைசெயலாளர், உள்துறை செயலாளர் மற்றும் மாநில உயர் அதிகாரிகளுடன் இன்று ஆலோசனை நடத்தவுள்ளனர்.

Back to top button
error: Content is protected !!