பொழுதுபோக்குதமிழ்நாடு

“தாபா ஸ்டைல் சிக்கன் மசாலா” ரெசிபி…!

சப்பாத்தி, ரொட்டி, நான் போன்ற அயிட்டங்களுக்கு எப்போதும் வழக்கம் போல் ஒரே மாதிரி சைடு டிஷ் செய்யாமல் புதுசா எதாவது செய்யலாம்னு நினைக்குறீங்களா… அப்போ இந்த “தாபா ஸ்டைல் சிக்கன் மசாலா” செஞ்சு பாருங்க. இந்த டிஷ் ரொம்ப ஸ்பைசியா இருக்கும். அதனால ஸ்பைசி பிரியர்களுக்கு இது ஒரு குட்டி விருந்து மாதிரி இருக்கும்.

நார்த் இந்தியாவில் உள்ள டேஸ்ட் நம்ம டேஸ்ட்ல இருந்து கொஞ்சம் மாறுபட்டு இருக்கும். அது மட்டும் இல்லாமல் தாபா ல சாப்பிட்ட பல பேர் அவுங்க சமையல் ருசியை பற்றி சொல்லி கேள்விப்பட்டு இருப்போம். இனிமேல் நம்ம வீட்லயே தாபா ஹோட்டல்ல கிடைக்கிற சாப்பாடு சுவையா கிடைத்தால் எப்படி இருக்கும்? ரொம்ப சுவையான, ஸ்பைசியான “தாபா ஸ்டைல் சிக்கன்” எப்படி செய்யலாம்னு பாக்கலாம் வாங்க.

தேவையான பொருட்கள்:

சிக்கன் – 500 gm

பெரிய வெங்காயம் – 1

தக்காளி – 2

பட்டைத்தூள் – 1 டீ ஸ்பூன்

கிராம்பு – 4

இஞ்சி, பூண்டு பேஸ்ட் – 1

டேபிள் ஸ்பூன்

மல்லித்தூள் – 1/2 டேபிள் ஸ்பூன்

சீரகத்தூள் – 1 டீ ஸ்பூன்

மிளகுத்தூள் – 1 1/2 டீ ஸ்பூன்

முந்திரி – 5

எண்ணெய் -3 டேபிள் ஸ்பூன்

கறிவேப்பில்லை – சிறிதளவு

பால் – 1 டேபிள் ஸ்பூன்

தயிர் – 2 டேபிள் ஸ்பூன்

மஞ்சள்தூள் – 1/2 டேபிள் ஸ்பூன்

மிளகாய்த்தூள் – 1/2 டேபிள் ஸ்பூன்

உப்பு – தேவையான அளவு

மல்லித்தழை – சிறிதளவு

செய்முறை:

முதலில் சிக்கன் துண்டுகளை மஞ்சள் தூள் சேர்த்து நன்கு கழுவிக் கொள்ள வேண்டும். பிறகு, ஒரு பௌலில் சிக்கன், தயிர், மிளகாய்த்தூள், மஞ்சள் தூள் சேர்த்து நன்கு கிளறி ஊற விட வேண்டும். இந்த கலவையை நாம் எவ்வளவு அதிக நேரம் ஊற வைக்கிறோமோ சுவையும் அவ்வளவு அதிகமாக இருக்கும். அதிகபட்சமாக ஒரு முழு இரவும் குறைந்தபட்சமாக ஒரு மணி நேரம் வரை ஊற வைக்கலாம்.

dhaba style chicken masala recipe main photo

பிறகு, முந்திரிகளை பாலில் சேர்த்து பேஸ்ட் போல் அரைத்து தனியே வைத்துக் கொள்ள வேண்டும். இப்பொழுது ஒரு பானில், எண்ணெய் ஊற்றி சூடானதும் அதில், வெங்காயத்தை சேர்த்து பொன் நிறம் ஆகும் வரை எண்ணையில் வதக்க வேண்டும். இப்பொழுது அதில் இஞ்சி, பூண்டு பேஸ்ட் சேர்த்து பச்சை வாடை போகும் வரை வதக்க வேண்டும். இப்பொழுது சிம்மில் வைத்து மல்லித்தூள், மிளகுத்தூள், சீரகத்தூள் சேர்க்க வேண்டும். எண்ணையில் மசாலா வெந்ததும் அதில் தக்காளியை சேர்க்க வேண்டும். இப்பொழுது இந்த கலவையை ஆற வைத்து அரைத்துக் கொள்ளவேண்டும்.

DSC4580 1024x684 1

இப்பொழுது அதே பானில், எண்ணெய் ஊற்றி கறிவேப்பிலை தாளித்து அதில், ஊற வைத்திருக்கும் சிக்கன் துண்டுகளை சேர்த்து 5 நிமிடங்கள் மூடி வைக்க வேண்டும். 5 நிமிடம் கழித்து அரைத்து வைத்திருக்கும் மசாலா கலவை மற்றும் முந்திரி பேஸ்ட் இரண்டையும் சேர்த்து மீண்டும் 5 நிமிடம் நன்கு கிளறி விட வேண்டும். இப்பொழுது தேவையான அளவு உப்பு மற்றும் தண்ணீர் சேர்த்து நன்கு வேக விட வேண்டும். சிக்கன் துண்டுகள் வெந்ததும் மல்லித்தழை சேர்த்து இறக்க வேண்டும். இப்பொழுது சூடான சுவையான “தாபா ஸ்டைல் சிக்கன்” ரெடி!!! இந்த சிக்கன் மசாலா சப்பாத்தி, ரொட்டி, நான் உடன் வைத்து பரிமாறினால் சூப்பராக இருக்கும்.

Back to top button
error: Content is protected !!