பொழுதுபோக்கு

மண்பானையில் தித்திக்கும் இனிப்பு பொங்கல் செய்முறை!

தமிழகத்தில் தை திருநாளான பொங்கல் பண்டிகை சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. பொங்கல் பண்டிகை நகரங்களை விட கிராமங்களில் வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்நிலையில் மண்பானையில் தித்திக்கும் இனிப்பு பொங்கல் செய்வது எப்படி என்பதை பற்றி இப்பதிவில் காணலாம்.

தமிழகத்தில் தமிழர் திருநாளாக பொங்கல் பண்டிகை கொண்டாடப்படுகிறது. இப்பண்டிகையை இலங்கை சிங்கப்பூர், மலேசியா, ஐரோப்பிய நாடுகள், தென் ஆப்பிரிக்கா மற்றும் மொரிஷியஸ் போன்ற மற்ற நாடுகளில் உள்ள தமிழர்களும் கொண்டாடி வருகின்றனர். பொங்கல் பண்டிகை 3 நாட்கள் தொடர்ந்து கொண்டாடப்படுகிறது. அந்த வகையில் கிராமங்களில் மண்பானையில் பொங்கல் வைப்பது வழக்கம்.

தேவையான பொருட்கள்:

 • பொன்னி பச்சரிசி – ஒரு கப்,
 • பாசிப்பருப்பு – அரை கப்,
 • பால் – ஒரு கப்,
 • அரிசி ஊறிய தண்ணீர் – ஒரு கப்,
 • கடலை பருப்பு – ஒரு டேபிள் ஸ்பூன்,
 • வெல்லம் – 2 கப்,
 • ஏலக்காய் பொடி – கால் டீஸ்பூன்,
 • ஜாதிக்காய் பொடி – சிறிதளவு,
 • நெய் – அரை கப்,
 • முந்திரி திராட்சை,
 • தேங்காய் துருவல் – சிறிதளவு

செய்முறை:

பொங்கல் வைக்க முதலில் பாசி பருப்பை நெய்யில் வறுத்து கொள்ளவும், பின்பு அரிசியை ஒரு பாத்திரத்தில் ஊற வைக்க வேண்டும். இப்பொழுது வறுத்த பாசிபருப்பை சேர்க்கவும். அதன் பிறகு அரிசி ஊறிய தண்ணீர் ஒரு கப், பால் அரை கப், தண்ணீர் 3 கப் சேர்த்து ஒரு மண்பானையில் நன்றாக கொதிக்க வைக்கவும். அதன் பிறகு இந்த கலவை நன்றாக கொதித்து பொங்கி வரும்போது அதில் அரிசி, கடலைப்பருப்பு மற்றும் பாசி பருப்பை சேர்க்கவும். பின்பு 2 கப் வெல்லத்தை சேர்த்து நன்றாக கிளறவும்.

அதன்பின் இந்த கலவையில், சிறிதளவு, ஜாதிக்காய் பொடி மற்றும் ஏலக்காய் பொடியை சேர்க்கவும். அதன் பிறகு பொங்கலில் சிறிதளவு நெய் சேர்த்து கிளறி விடவும். பொங்கல் ஒரு பதத்திற்கு வந்த உடன் அதை எடுத்து தனியாக வைத்து விட்டு, ஒரு பாத்திரத்தில் மீதமுள்ள நெய் விட்டு அதில் முந்திரி, திராட்சை மற்றும் தேங்காய் துருவல் சேர்த்து நன்றாக வறுத்து எடுத்து பொங்கலில் சேர்க்கவும். தற்போது சுவையான பொங்கல் ரெடி ஆகிவிடும்.


உடனுக்குடன் அண்மைச் செய்திகளை தெரிந்து கொள்ள உடனே கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்து பின் தொடருங்க...
Google News - https://bit.ly/3BonVzx
Facebook - https://bit.ly/3iGDsUb
Twitter - https://bit.ly/3v42Kkh

Back to top button
error: