இந்தியா

தலைமை தேர்தல் ஆணையராக பதவியேற்றார் சுஷில் சந்திரா..!

இந்திய தேர்தல் ஆணையத்தின் 24-வது தலைமை தேர்தல் ஆணையராக திரு. சுஷில் சந்திரா பதவியேற்றார். அடுத்த ஆண்டு மே மாதம் 14-ம் தேதி வரை அவர் தலைமை தேர்தல் ஆணையராக பொறுப்பு வகிப்பார்.

தலைமை தேர்தல் ஆணையராக இருந்த திரு. சுனில் அரோராவின் பதவிக்‍காலம் நேற்றுடன் முடிவடைந்தது. இதையடுத்து புதிய தலைமை தேர்தல் ஆணையராக திரு. சுஷில் சந்திராவை நியமிக்‍க குடியரசு தலைவர் திரு. ராம்நாத் கோவிந்த நேற்று ஒப்புதல் அளித்தார்.

இதனைத்தொடர்ந்து தலைமை தேர்தல் ஆணையராக திரு. சுஷில் சந்திரா, டெல்லியில் உள்ள இந்திய தேர்தல் ஆணையத்தில் இன்று பொறுப்பேற்றுக்‍கொண்டார்.

இவரது தலைமையின் கீழ் கோவா, மணிப்பூர், உத்தரகாண்ட், உத்தரப்பிரதேசம், பஞ்சாப் ஆகிய மாநிலங்களின் சட்டப்பேரவை தேர்தல் அடுத்த ஆண்டு நடைபெறவுள்ளது. வரும் மே 2-ம் தேதி 5 மாநில சட்டப்பேரவை தேர்தல் வாக்‍கு எண்ணிக்‍கை திரு.சுஷில் சந்திரா தலைமையில் நடைபெறவுள்ளது குறிப்பிடத்தக்‍கது.

இதையும் படிங்க:  மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகருக்கு கொரோனா தொற்று உறுதி!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: