சினிமாபொழுதுபோக்கு

ஆஸி மேட்ச்ல ‘ஆரி’க்கு சப்போர்ட் ‘கடவுள்’ இருக்கான் குமாரு.. கடல் கடந்து ‘பெருகும்’ ஆதரவு!

பிக்பாஸ் வீட்டில் இருந்து இந்த வாரம் ஷிவானி வெளியேறி இருக்கிறார். இதையடுத்து ஆரி, ரியோ, சோம், கேப்ரியலா, ரம்யா, பாலாஜி ஆகிய ஆறு போட்டியாளர்கள் பைனலுக்குள் நுழைந்து இருக்கின்றனர். வழக்கமாக நான்கு போட்டியாளர்கள் பைனலுக்கு செல்வார்கள். இந்தமுறை ஆறு பேர் என்பதால் இதென்ன புது டுவிஸ்டா இருக்கு? என ரசிகர்கள் ஆர்வத்துடன் காத்துள்ளனர்.

இதற்கிடையில் பிக்பாஸ் டைட்டிலை வெல்லப்போவது யார்? என்ற கேள்வி ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது. ஒரு சிலர் ஆரி, பாலாஜி இருவரில் ஒருவருக்கு வாய்ப்பு இருக்கிறது என சொல்ல வேறு சிலரோ ஆரி வின்னர், பாலாஜி ரன்னர் என ஆரூடம் சொல்லி வருகின்றனர். எனினும் ஆரி வின்னராக வேண்டும் என பெரும்பாலான ரசிகர்கள் சமூக வலைதளங்களில் கருத்து தெரிவித்து அவருக்கு வாக்களித்து வருகின்றனர்.

இந்த நிலையில் இந்தியா-ஆஸ்திரேலியா டெஸ்ட் மேட்சுக்கு நடுவில் ரசிகர்கள் ஆரிக்கு ஆதரவு தெரிவித்த புகைப்படம் சமூக வலைதளங்களில் வெளியாகி உள்ளது. அதில் பிக்பாஸ் 4 தமிழ் வின்னர் ஆரி அர்ஜுனன் என எழுதி, அதற்கு கீழே கடவுள் இருக்கான் குமாரு என தெரிவித்து இருக்கின்றனர். இன்னும் சரியாக 6 தினங்கள் முடிவில் டைட்டில் வின்னர் யார்? என்பது தெரிந்து விடும். அதுவரை நாம் காத்திருக்கலாம்!

Back to top button
error: Content is protected !!