பொழுதுபோக்குதமிழ்நாடு

சூப்பரான எண்ணெய் கத்தரிக்காய் குழம்பு ரெசிபி..!

கத்தரிக்காயில் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பிச் சாப்பிடும் வகையிலான எண்ணெய் கத்தரிக்காய் குழம்பு செய்வது எப்படி என்று பார்க்கலாம்.

தேவையான பொருட்கள்

கத்தரிக்காய் – 1/4 கிலோ
சின்ன வெங்காயம் – 10
பெரிய வெங்காயம் – 1
தக்காளி – 2
தேங்காய் – 3 துண்டுகள்
பூண்டு – 1
கடுகு – தேவையான அளவு
வெந்தயம் – 1/2 ஸ்பூன்
மிளகாய்த் தூள் – 2 ஸ்பூன்
தனியா தூள் – 1 ஸ்பூன்
மஞ்சள் தூள் – 1/4 ஸ்பூன்
புளி – எலுமிச்சை அளவு
நல்லெண்ணெய் – தேவையான அளவு
கறிவேப்பிலை – கைப்பிடியளவு
உப்பு – தேவையான அளவு

செய்முறை

கத்தரிக்காய்களை நான்கு பாகங்காக நறுக்கி கொள்ளவும். அடுத்து தக்காளி, கொத்தமல்லி, பெரிய வெங்காயம், சின்ன வெங்காயம் மற்றும் பூண்டை நறுக்கிக் கொள்ளவும்.

அடுத்து வாணலியில் எண்ணெய் ஊற்றி கடுகு, வெந்தயம், கறிவேப்பிலை போட்டு தாளித்து சின்ன வெங்காயம், பெரிய வெங்காயம், பூண்டு, தக்காளி, கத்தரிக்காயைப் போட்டு நன்றாக வதக்கவும். அடுத்து தேங்காயை மிக்சியில் போட்டு மைய அரைத்துக் கொள்ளவும்.

அடுத்து அரைத்து வைத்துள்ள தேங்காய் விழுது மிளகாய்த் தூள், தனியாத் தூள், மஞ்சள் தூள் சேர்த்து கிளறவும்.
அடுத்து புளிக் கரைசல், உப்பு சேர்த்து கொதிக்கவிட்டு இறக்கினால் எண்ணெய் கத்தரிக்காய் குழம்பு ரெடி.

Back to top button
error: Content is protected !!